Oplus_131072
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள் அதில், 1/2-ஸ்பூன் வெந்தயம், 1/2- ஸ்பூன் சீரகம், 1/2 – ஸ்பூன் ஓமம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை தண்ணீரில் இந்த பொருட்கள் அனைத்தும் வெந்ததும், இறுதியாக 2 சிட்டிகை பெருங்காயத்தூள், 2 சிட்டிகை உப்பு சேர்த்து வடிகட்டிய அந்த நீரை குடித்து விடவேண்டும். இந்த தண்ணீரை உணவு சாப்பிட்ட பின்பு, அரை மணி நேரம் கழித்து குடிக்கலாம். உடலில் இருக்கக்கூடிய வாயு அனைத்தையும் வெளியேற்றக் கூடிய சக்தி இந்த ஒரு டம்ளர் நீரில் உள்ளது….




