இட்லி, தோசைக்கு அரைக்கும் மாவு புளிக்காமல் இருக்கணுமா..?
அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!
நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் அதிகமாக விரும்பி சாப்பிடும் காலை உணவு இட்லி தோசை போன்ற உணவுகள் தான். எல்லா வீடுகளிலும் இந்த உணவு இருப்பது தான் வழக்கம். இந்த வகையில் இந்த இட்லி தோசை மாவை அனைவரும் ஒரு நாள் முன்பே அரைத்து வைத்து விடுவார்கள். அடுத்த நாள் காலையில் இட்லியோ அல்லது தோசையோ செய்வார்கள். ஆனால் மாவு சில நேரங்களில் அதிகமாக புளித்து இட்லி புளிப்பு சுவையுடன் காணப்படும். இதை நாம் எவ்வாறு சரி செய்யலாம். மாவு புளிக்காமல் புதிய மாவு போலயே இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நாம் மாவு அரைக்கும் அளவுகளிலிருந்து நாம் மாவு அரைத்து வைக்கும் வரை சரியாக இருந்தால் தான் மாவு புளிக்காமல் இருக்கும். அதற்கு நாம் உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் மட்டும்தான் ஊற வைக்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம். அரிசியை நாலு மணி நேரம் மட்டுமே ஊற வைக்க வேண்டும். இவ்வாறு ஊறவைத்து நாம் மாவு அரைத்தால் தான் மாவு நன்றாக இருக்கும். ஒரு சிலர் தூங்கும் போது இரவு நேரத்திலேயே இதை ஊற வைத்து விடுவார்கள். அப்படி மாவு அரைத்ததால் கூட புளிக்கும் வாய்ப்பு அதிகம். மாவு அரைக்கும் போது ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கியூபை பயன்படுத்தி அழைத்தால் மாவு நன்றாக புதிய மாவு போலவே அடுத்த நாளும் இருக்கும். இட்லியும் பஞ்சு போல இருக்கும். ஐஸ் கட்டி சேர்ப்பதால் உளுந்த மாவு நன்றாக ஆகும். மேலும் மாவு அதிகமாக புளிக்காமல் இருக்க வெற்றிலை காப்பு ரெண்டு அந்த மாவில் போட்டு வைத்தால் மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிகமாக மாவு அரைப்பவர்கள் கொஞ்சம் தேவைக்கு மட்டும் எடுத்து உப்பு போட்டு கலந்து கரைத்து வைத்து மீதி உள்ள மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் மாவு புளிக்காமல் இருக்கும். பின்னர் உப்பு போட்டு கலந்த மாவில் ஊமவள்ளி இலைகளை போட்டாலும் மாவு புளிக்காது. இதையெல்லாம் செய்தாலே நமக்கு மாவு நீண்ட நாட்களுக்கு குறிப்பாக இரண்டு நாட்களுக்கு குளிக்கும் சுவை இல்லாமல் புதிய மாவு போலயே இருக்கும்.




