இந்தத் துவையலை செய்து கொடுத்தால் நொடியில் காலியாகிவிடும்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

நாம் எப்போதும் தோசை இட்லி சப்பாத்திக்கு ஒரே மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்டு தான் வருகிறோம். இன்று அதற்கு மாறாக சுவையான கேரட் துவையல் எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 2
கொள்ளு – அறுபது கிராம்
பூண்டு – 2 பல்
உளுந்தம் பருப்பு – 2 கை அளவு
காய்ந்த மிளகாய் – 20
கடலை பருப்பு – ஒரு கையளவு
கருவேப்பிலை, கடுகு, உளுந்து – தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயத்தை குட்டி குட்டியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு வெங்காயம் மற்றும் கேரட் துருவல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

அதன்பின் அதேபோல மிளகாய் வத்தல் கொள்ளு உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கேரட் வெங்காய கலவையுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின் வருத்த பருப்புகளையும் அதனுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்பு கடுகு உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான கேரட் துவையல் தயார்.

Read Previous

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மத அரசியல் செய்பவர்களுக்கு அஜித் கொடுத்த ரிப்ளை..!! என்ன சொன்னார் தெரியுமா..!!

Read Next

IPL 2025..!! கடைக்குட்டியின் அசத்தலான ஆட்டம்..!! சாதனை படைத்த 14 வயது வைபவ் சூரியவன்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular