இந்தியாவில், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி 6.7% உயர்ந்துள்ளது. இறக்குமதி 10% குறைந்து 61.59 பில்லியன் டாலராகவும் பதிவாகியுள்ளது. இருப்பினும், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால், வர்த்தகப் பற்றாக்குறை 26.49 பில்லியன் டாலரிலிருந்து 35.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2025 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஏற்றுமதி 184.13 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 306.52 பில்லியன் டாலராகவும் உள்ளது.




