Oplus_131072
ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் உலகில் மூன்று விதமான மனிதர்கள் உள்ளனர் என்றார்.
1. மற்றவர்களுக்கு உதவுவர் 2.மற்றவர்களுக்கு துன்பம் கொடுப்பவர்.
3.பிறர் பொருளை அபகரித்து இன்பம் காண்பவர்.
என்று அதற்கு விளக்கம் செய்தார்.
இதில் நாம் எந்த ரகம் என்று நாமே தான் யோசித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்.
வகுப்பில் இருந்த மாணவன் ஒருவன் நீங்கள் சொல்வது புரியவில்லை விளக்கமாக சொல்லுங்கள் என்றான்.
அவனிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார் அதை மூன்று கிண்ணங்களில் ஊற்றி முதல் கிண்ணத்தில் சிறிது சர்க்கரையைச் சேர்த்தார் அந்த நீரை குடிக்க சொன்னார் அவனது முகம் பிரகாசமாகியது.இந்த மனிதர்கள் பிறருக்கு உதவி செய்பவர்கள் அதாவது சர்க்கரையை போல் இனிமையானவர்கள்.
இரண்டாவது கிண்ணத்தில் சிறிது களிமண்ணை சேர்த்தார் அது கரைந்ததும் தண்ணீர் கலங்கல் ஆனது இந்த களிமண் குணம் கொண்டவர்களே இரண்டாம் வகையினர் என்றார் அதாவது பிறரை கெடுத்து துன்பம் கொடுப்பவர்கள் அதன் மூலம் இன்பம் காண்பவர்கள்.
மூன்றாவது கிண்ணத்தில் சிறிது பஞ்சினை இட்டார் அது தண்ணீரை உறிஞ்ச தொடங்கியது.
இவர்கள் பிறர் பொருளை அபகரித்து வாழும் சுயநலவாதிகள்.
ஆக மொத்தத்தில் மூன்று விதமான மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் இப்பொழுது புரிந்ததா என்றார்..




