கேரள மாநிலம் பாரம்பரியமான உணவு கலாச்சாரத்தை கொண்டிருக்கிறது. கேரளாவை அடிப்படையாக கொண்டிருக்கும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட சுவையான ஒரு உணவு தன் நெய் அப்பம். இதை வீட்டிலேயே எப்படி சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையானவை:
பச்சரிசி மாவு 1 கப்,
ரவை 2 ஸ்பூன்,
மைதா 2 ஸ்பூன்,
வெல்லம் ½ கப்,
வாழைப்பழம் 2,
தேங்காய் துண்டுகள் சிறிதளவு,
கருப்பு எள் 1 ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் ¼ ஸ்பூன்,
நெய் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
இரண்டு வாழைப்பழங்களை எடுத்து நன்றாக அதை பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அரிசி மாவு ரவை மைதா ஏலக்காய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதில் வாழைப்பழத்தை சேர்க்கவும். பின்பு பாகு தயாரிக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் வெள்ளம் சேர்த்து பாகு தயாரித்துக் கொள்ளவும்.
அதன் பின் கரைத்து வைத்திருக்கும் மாவில் இந்த பாகை ஊற்றி கட்டியாக இல்லாமல் நன்றாக கிண்ட வேண்டும். பின் அந்த மாவுடன் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் கருப்பு எள் மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் பணியாரம் செய்யும் கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி நன்றாக உருகி சூடானதும் நாம் தயாரித்து வைத்திருக்கும் மாவை எடுத்து அதில் ஊற்றி பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான நெய் அப்பம் தயார்.



