நமக்கு காரசாரமான உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் நாம் செட்டிநாடு வகை உணவுகளை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவோம். அதில், காரம் அதிகமாக இருக்கும். அதில் மிளகாய் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும். நாம் மிளகாய் சட்னி, குழம்பு போன்ற உணவுகளில் அதை சேர்த்து காரத்தை அதிகப்படுத்துவோம். ஆனால் வெறும் மிளகாய் மட்டுமே வைத்து துவையல் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா. இந்த பதிவில் அதைப்பற்றி காண்போம்.
தேவையானவை:
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
வத்தல் மிளகாய் – 8 – 10 (அல்லது சுவைக்கு ஏற்ப)
சுண்டைக்காய் வத்தல் (விருப்பமாக) – 1 டீஸ்பூன்
இஞ்சி துண்டு – 1 அங்குலம்
பூண்டு பல் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊத்தவும். அதில் வெந்தயம், வத்தல் மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதில் புலியையும் உப்பையும் எடுத்துக்கொண்டு தண்ணீர் தெளித்து சற்று ஊற வைத்த பின் பசை போல அறைத்துக் கொள்வோம். அடுத்தடுத்து எல்லா பொருட்களையும் ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மிளகாய் துவையல் தயாராகிவிட்டது.



