இனி டிஷ் வாஷ் லிக்விட் வாங்காதீங்க- வெறும் 10 ரூபாய் செலவில் வீட்டிலேயே செய்வது எப்படி?..

கடைகளில் விற்கும் பாத்திரம் கழுவும் திரவங்களில் அதிகப்படியான கெமிக்கல் கலந்திருப்பதால் அதிகமாக பயன்படுத்தும் பெண்களுக்கு சில சேதங்களையும் அழற்சிகளையும் ஏற்படுத்தலாம்.

 

 

 

சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கியும் அதனால் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

ஆனால் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு பாத்திரம் கழுவும் திரவம் தயாரிக்கலாம். அதற்கு வெறும் 10 ரூபாய் மாத்திரமே செலவாகும்.

இயற்கையான நறுமணத்துடன் சுத்தமாக பாத்திரம் கழுவ இந்த திரவம் உதவியாக இருக்கும். புத்துணர்ச்சியூட்டும் இந்த திரவத்தை தயாரிப்பதற்கு சில நுணுக்கங்கள் உள்ளன.

அந்த வகையில், வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு பாத்திரம் கழுவும் திரவம் எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சைப் பழங்கள்- 4
  • தண்ணீர்- 1 லிட்டர்
  • பாத்திரம் கழுவும் திரவம்- 2 ஸ்பூன்

 தயாரிப்பு படிமுறை

 

முதலில் 4 எலுமிச்சைப் பழங்களை வெட்டி தனியாக வைத்து கொள்ளவும். அதன் பின்னர், ஒரு கிண்ணத்தில் வெட்டி வைத்திருக்கும் எலுமிச்சைத் தூண்டுகளை சேர்க்கவும். அதனுட் ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றவும். அடுத்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விடவும்.

சுமார் 2 நிமிடங்கள் கொதித்து வரும் பொழுது 2 நிமிடங்களுக்குப் பின்னர் அடுப்பை அணைத்து விடவும். தண்ணீர் முழுமையாக குளிர்ந்த பின்னர், வேகவைத்த எலுமிச்சைத் துண்டுகளை கையால் தண்ணீரில் நன்கு பிழிந்து, எலுமிச்சையின் கடைசி சொட்டு வரை கூட வீணாகாமல் எடுக்கவும்.

 

 

ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி, எலுமிச்சை கூழ் மற்றும் விதைகளை அகற்ற வேண்டும்.

கடைசியாக எலுமிச்சை கலந்த நீரில், 2 ஸ்பூன் வழக்கமான பாத்திரம் கழுவ பயன்படுத்தும் திரவத்தை கலந்தால் நீங்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த திரவம் தயாராகி விடும்.

இதனை கொண்டு பாத்திரங்கள் கழுவும் பொழுது கைகளில் வரும் அழற்சிகள் குறையும். அதே சமயம், பாத்திரங்களும் பளபளப்பாக மாறும்.

Read Previous

வீட்டில் பூண்டும் வெற்றிலையும் இருக்கா?.. இப்படி யூஸ் பண்ணுங்க கரப்பான் தொல்லை இருக்காது..!!

Read Next

மழைக்காலத்தில் இந்த ரசத்தை மட்டும் குடித்து பாருங்க…சளி இருமல் வரவே வராது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular