தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் ‘சிங்க பெண்’ சிறப்பு படைக்கு, சர்வதேச தரத்திலான பிரத்யேக சீருடையும் தனித்துவமான லோகோவும் தயாராகி வருகின்றன. வழக்கமான காக்கிக்கு மாற்றாக, கமாண்டோ பாணி வண்ணத்தில் இலகுரக துணியால் ஆன நவீன உடையும், சிங்க முகம் பொறித்த இலச்சினையும், அதிநவீன உபகரணங்களும் இப்படையினருக்கு வழங்கப்படவுள்ளன.




