Oplus_131072
ரச பொடி
தேவையான பொருட்கள் :::
காய்ந்த மிளகாய் – ———– 1 கப்
தனியா – ———– 3 கப்
துவரம் பருப்பு – ——— 1/2கப்
மிளகு ——— 1/2 கப்
சீரகம் – ———— 1 1/2 கப்
கட்டிவிரளி மஞ்சள் – 4
செய்முறை :::
விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.
தனியா, துவரம் பருப்பு,மிளகு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை
வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.
வறுக்க வேண்டாம்..
வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது.. பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.
எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.



