கூகுள் நிறுவனம் இந்தியாவில் Emergency Location Service (ELS) இருப்பிட சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர எண் 112-ஐ டயல் செய்யும் போது, இந்த அம்சம் தானாகவே அழைப்பாளரின் துல்லியமான இருப்பிடத்தை கண்டறிந்து அவசர மீட்பு சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளும். இது வழக்கமான தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை சார்ந்தது அல்ல; GPS மற்றும் Wi-Fi தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. தற்போது இந்த சேவை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.




