மகாராஷ்டிராவின் நாக்பூரில் ‘கோல்டிரிப்’ இருமல் மருந்து உட்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூன்றரை வயது சிறுமி அம்பிகா விஸ்வகர்மா மற்றும் 9 மாதக் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தனர். இதனால், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவில் இருமல் மருந்து உட்கொண்டதால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர், மருத்துவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




