இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்..!! தர்ம அடி.. அதிரடி கைது..!!

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய வீட்டின் குளியலறையில் நேற்று (ஜூலை 2) காலை குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் திடீரென்று திரும்பி பார்த்தபோது வாலிபர் ஒருவர் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

 

உடனே அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த செல்போனை பார்த்தபோது அந்த இளம்பெண் குளிப்பது வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிவச்சந்திரகுமார் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read Previous

ரூ.25,000 உதவித்தொகை.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!

Read Next

பெண்களை ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular