பெண்களை ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா..??

Oplus_131072

பெண்களை ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா ??

வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.ஆனால் இப்போது,இந்தபழக்கம்,வெகுவாககுறைந்து விட்டது..முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டிபெண்கள்,மகிழ்ச்சியாக ஆடினார்கள். இப்போது செல்போன் கையுமாகவே சுற்றுகிறார்கள். படிப்படியாய் குறைந்து தற்போது காணாமல் போய்விட்டது இந்த பழக்கம்…இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்…
இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் விழாக்கள் இன்றும் உண்டு ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள நெகடிவ் எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றதது திருமணங்களில் ஊஞ்சல் சடங்கு’ இதன்அடிப்படையிலேயே உருவானது.

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் அடையும்…நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு சைடுகளிலும் உள்ள சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. கணிணியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய தலைமுறையினர் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று
க ழுத்துவலி போன்ற பிரச்சனைகள் வராது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும்

தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது…மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு(ஆக்சிஜன்) வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான ஆக்சிஜனை கொடுத்து இ தயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இ த ய நோய் கட்டுப்படும். ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ர த் த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இது உதவும். உணவு மண்டலம் சீரடையும்.. கோ பமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோ பம் குறையும்.. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக அமைதியாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும். பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள் வீட்டுக்குள் வரும் தேவதைகள் வீட்டின் முன் இருக்கும் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், என்று சொல்லி வைத்தார்கள்.

ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது. இப்போது ஊஞ்சலை பார்ப்பது அரிதாக உள்ளதுவாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது. என்று பலரும் கூறுகின்றனர்.

Read Previous

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்..!! தர்ம அடி.. அதிரடி கைது..!!

Read Next

ஆன் பெண் உறவு எப்போது முழுமை பெறுகிறது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular