முடி உதிர்வது இப்போது ஒரு சாதாரண பிரச்சினையாகவே மாறிவிட்டது. இந்த பிரச்சனை வயது மன அழுத்தம் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால் ஏற்படும். இதனை சரி செய்ய அனைவரும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி உபயோகிப்பார்கள். ஆனால் அது எப்போதும் கை கொடுக்காது. அந்த வகையில் நமது முடிகளின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம்.
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக முடியின் வளர்ச்சியை இது மேம்படுத்தும். மேலும் இது பாக்டீரியாக்களையும் பூஞ்சையும் எதிர்க்கும். இதனால் நமது முடி ஆரோக்கியமாக இருக்க இந்த தேங்காய் எண்ணெய் மிகவும் உதவுகிறது. மேலும் இந்த தேங்காய் எண்ணெய் நமது ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும்.
உங்கள் தலைகளில் முடி அதிகமாக வளர தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெயை கலந்து சூடாக்கி தடவுங்கள். இந்த ஆமணக்கு எண்ணெயில் ரிஷிநோலிக் அமிலம் மற்றும் ஒமேகா 6 கொழுப்புகள் நிறைந்திருக்கிறது. ஆகையால் நமது முடியின் வேர்களை பலப்படுத்தும்.
ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யுடன் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலந்து உபயோகித்து பாருங்கள். இதனுடன் மிளகு கீரை அல்லது ரோஸ்மேரி சேர்க்கலாம். கொஞ்சம் தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையை சேர்த்து சூடாக்கி அதை நமது தலையில் தடவி வர வேண்டும்.
இது போன்ற பொருட்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நமது தலைகளில் தேய்த்து ஊற வைத்து 30 நிமிடம் கழித்து குளித்து விடுங்கள். இப்படி செய்தால் எங்கெல்லாம் முடி இல்லையோ அங்கே முடி அதிகமாக வளர்வதை உங்களால் நிச்சயமாக காண முடியும்.



