இன்றைய காலத்துக்கட்டத்தில் பலரும் தங்களது உடல் எடையை குறைப்பதற்கும் தங்களின் தொப்பையை குறைப்பதற்கும் பெரிதும் முயற்சி செய்து வருகின்றனர் அவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக அமையும்..
ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நட்ஸ்கள் மற்றும் விதைகள் உடல் எடையை குறைக்க உதவும், பிஸ்தா, பாதம், அக்ரூட் பருப்புகள் மற்றும் வேர்க்கடலை ஆகியவை மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரங்கள் இது தவிர பூசணி, சியா மற்றும் ஆளி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகின்றன, இவை உடலுக்கு புரதத்தை வழங்குகிறது வீக்கத்தால் ஏற்படும் சேதத்தை குறைக்கின்றன மற்றும் செரிமான அமைப்பை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன இதன் காரணமாக எடை விரைவாக குறைகிறது, உடல் எடையை குறைக்க நீங்கள் பழங்களை சாப்பிட வேண்டும் பழங்களை காலை உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ சாப்பிடலாம் இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நார்ச்சத்து வைட்டமின் மற்றும் தாது பொருட்களை நல்ல அளவில் வழங்குகின்றன வயிற்றில் உள்ள கொழுப்புகளை எரிப்பதன் மூலமும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதன் மூலமும் பசியை கட்டுப்படுத்த இவை உதைக்கின்றன..!!




