உடம்பு வலி போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கிறதா..!! இந்த சூப்பை குடியுங்கள் போதும்..!!

நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது நாம் சாப்பிடும் உணவுதான். அப்படி பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை உடல் சோர்வு கை கால் வலி உடம்பு வலி சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்த இந்த சூப் போதும். அதை எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில்.

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை – 3 கைப்பிடி,

சின்ன வெங்காயம் – 10,

பாசிப்பருப்பு – 1/2 கப்,

பூண்டு – 8 பல்,

தக்காளி – 1,

கொத்தமல்லி விதை 5 – ஸ்பூன்,

சீரகம் மிளகு – 1 ஸ்பூன்,

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு கடாய் எடுத்து கொத்தமல்லி விதை சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுக்கவும். குக்கரில் முருங்கைக் கீரையை 5 டம்பளர் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு மிளகு சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை போட்டு நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.

அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வடிகட்டி ஆற வைக்கவும். ஜாரில் இதையெல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். நாம் வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரில் இந்த கலவையையும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயை எடுத்து இவை அனைத்தையும் அதில் போட்டு உப்பு மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். கொத்தமல்லி தலையை அதில் தூவி இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை சூப் தயார்.

Read Previous

Cognizant Technology Solutions-யில் அருமையான வேலைவாய்ப்பு..!! அனைவரும் கட்டாயம் விண்ணப்பியுங்கள்..!!

Read Next

மூளை வளர்ச்சி அடைய இந்த வெண்டைக்காய் பொரியலை சமைத்து பாருங்கள்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular