Oplus_131072
வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் பொன்னிறம் ஆகும்வரை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக எடுத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை ஆறு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் தினமும் இரவு சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்து, ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் இந்த பொடியை ஒரு ஸ்பூன் போட்டு கலக்கி குடிக்க வேண்டும். சர்க்கரை, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, தேன் இதில் எதுவும் சேர்க்கக்கூடாது. இப்படி செய்து வந்தால் உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள ஒட்டுமொத்த கழிவுகளும் வெளியேறும். இந்தப் பொடியை சாப்பிட்ட முதல் நாளே மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும். நிறைய மாத்திரை சாப்பிடுபவர்கள் இந்த பொடியை சாப்பிட்டால் மாத்திரையால் ஏற்பட்ட கெட்ட கழிவுகள் வெளியேறும். ரத்தக் குழாயில் அடைப்பு, கொழுப்பு சேர்ந்து இருந்தால் கொழுப்பு கரைந்து இதயம் பலப்படும். சருமத்தில் சுருக்கங்கள் மறைந்து சர்மத்தை இளமையாக வைத்திருக்க இந்த பொடி உதவும். உடல் வலிமையாகும். எலும்பு தேய்மானத்தை சரி செய்யும். நரம்புகள் பலப்படும். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இந்த பொடியை சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாகும். ஆண், பெண் மலட்டுத்தன்மை, பாலியல் பிரச்சினை சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும். ரத்த அடைப்பு சரியாகும். தலைமுடி கொட்டுதல் நின்று முடி நன்றாக வளரும். நமது உடலின் சர்க்கரை அளவை சரியாக வைக்கும். உடல் எடையை குறைக்கும். செரிமான உறுப்புகள் சரியாகும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாற, கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனையை சரிசெய்யும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனையை சரிசெய்து பற்களை உறுதியாக்கும்.
#வெந்தயம்: வெந்தயம் உடல் சூட்டை குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. தினமும் ஆறு வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும். தினமும் வெந்தயப் பொடியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் சுத்தமாகும். வெந்தயத்தை ஊறவைத்து அதனை அரைத்து பேஸ்டாக எடுத்து தலையில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி கொட்டுதல் பிரச்சனை சரியாகும். முடி அழகாக வளரும்.
#வெந்தயக் கீரை: வெந்தயக் கீரையை தினமும் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண்,உடல் அலர்ஜி, ரத்த அழுத்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். வெந்தயக் கீரையை சிறிது மிளகுடன் சூப் செய்து குடித்து வந்தால் கல்லீரல் போன்ற பிரச்சினை சரியாகும்.
#ஓமம்: உடல் சோர்வை தணிக்க வல்லது ஓமம். செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனையை சரிசெய்யும். வாய்வு பிரச்சனை தீரும்.வயிற்றுப் புழுக்களை கொள்ளும். புழுங்கலரிசி, ஒரு ஸ்பூன் ஓமம், சிறிது அளவு உப்பு, ஒரு கப் மோர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஓமத்தையும்,புழுங்கலரிசியும் தனியாக வறுக்க வேண்டும். புழுங்கல் அரிசியை ஒரு கப் தண்ணீர் வைத்து சிறிது உப்பு சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும். பின்னர் அந்த ஓமப்பொடியை சேர்த்து ஐந்து நிமிடம் அந்த கஞ்சியை கொதிக்க வைத்து இறக்கவும். பின்னர் அத்துடன் ஒரு கப் மோர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் உடல் சோர்வு நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
#கருஞ்சீரகம்: கருஞ்சீரகம் புற்றுநோயை தடுக்க உதவும் உணவுப் பொருள். அதுமட்டுமில்லாமல் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். கருஞ்சீரகத்தை அரைத்து பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை சரியாகிவிடும். பித்தப்பையில் கல், தைராய்டு போன்ற பிரச்சனைகள் சரியாகும். கருஞ்சீரக டீ குடித்து வந்தால் உடல் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும். ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை பொடியாக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதில் அந்த பொடியை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.




