ஒரு ஆண்”சிங்கிள்தான் கெத்து” என்ற மனநிலையில் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
இளமை தீர்ந்தது.திருமணம் வயதை கடந்தாயிற்று. இப்போது திரும்பி பார்த்தால் சிங்கிள்தான் கெத்து என சொல்லி அவருடன் சுற்றிய சக நண்பர்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டார்கள்.
அவரை விட வயதில் குறைந்த உறவினர்கள் அணைவரும் திருமணம் முடிந்து குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்கிறார்கள்..
இப்போது அவர் மட்டும் தனி மரமாக வாழ்கிறார். சுகர் போல எதோ நோய் வேறு உள்ளதாம்.
“நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னால், நீங்களாவது என்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்திருக்கலாமே” என அழுதாராம்.
திருமணம் ஆகாத தனி மனிதராக இருப்பதால் வெட்கத்தில் உறவு முறைகளில் நடக்கும் விஷேசத்திற்க்கு
அவரை அழைப்பதில்லை..
இளமையில் சிங்கிள்தான் கெத்து. திருமண வாழ்க்கையை விட பிரம்மச்சாரியம் தான் சிறந்தது என செல்லும் பல ஆண்களுக்கு முதுமையில் இந்த நிலைதான் ஏற்படுகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை…..
உங்க உடம்பில் தெம்பு இருக்கிற வரைக்கும் நீங்கள் யாரையும் நாட மாட்டீர்கள்…
நீங்கள் நோய்வாய் பட்டு இருக்கும்போது நமக்கென்று ஒரு துணை இருந்தால் பார்த்துக் கொள்வாளே என்று ஒரு ஏக்கம் இருக்கும்..



