உயிரைப் பறிக்கும் உருளைக்கிழங்கு..!! உஷாரா இருங்க மக்களே..!!
பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். உருளைக்கிழங்கு வறுவல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் உருளைக்கிழங்கு இப்படி சாப்பிட்டால் உயிரை பறிக்கும் அபாயம் ஏற்படும் என்று சொன்னால் நம்புவீர்களா…
ஆம், பச்சை நிறம் ஆகி முளைக்கத் தொடங்கிய உருளைக்கிழங்கை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படக்கூடும் என்று நிபுணர்களும் மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமின்றி, இப்படி சாப்பிடுவதால் மரணம் கூட நிகழலாம் எனவும் கூறுகின்றனர். உருளைக்கிழங்கு முளைவிடும் போது அதில் உள்ள க்ளைக்கோ ஆல்கலாய்டு அளவு அதிகரிக்க தொடங்குமாம். அதனால் இது அதிக நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிட்ட சில மணி நேரம் முதல் அடுத்த ஒரு நாளில் இதன் அறிகுறிகள் தென்படும் என கூறுகிறார்கள் நிபுணர்கள். பச்சை மற்றும் முளைத்த உருளைக்கிழங்கின் சிறு பகுதியை அகற்றிவிட்டு சமைத்தாலும் அதிலுள்ள நச்சுத்தன்மை அழியாது. ஆகையால் அந்த உருளைக்கிழங்கை தூக்கி போடுவதே சிறந்தது. பச்சை மற்றும் முளைத்த உருளைக்கிழங்கை ஒருபோதும் வாங்காதீர்கள். உருளைக்கிழங்கு வாங்கும் போது கண்டிப்பாக பார்த்து வாங்கி சமைத்து உண்ணுங்கள்.




