இந்த நவீன காலகட்டத்தில் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். மேலும் சிலர், வேலை பளு காரணமாகவும் சத்தான உணவு முறையை பின்பற்றாமல் அதிகமாக ரெடிமேட் உணவுகள் மற்றும் உடல் எடை கூடக்கூடிய உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை அதிகப்படுத்துகின்றனர். பின்னர் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்று தெரியாமல் பல விஷயங்களை செய்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுக்கெல்லாம் ஒரே தீர்வு இந்த உலர் திராட்சை தான். இந்த உலர் திராட்சை கோல்டன் மற்றும் கருப்பு மற்றும் பச்சை என மூன்று நிறங்களில் கிடைக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி போலிக் ஆசிட் இரும்புச்சத்து பொட்டாசியம் வைட்டமின் பி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் உடல் எடை அதிகரிக்காமல், உடல் எடையை குறைக்க இந்த உலர் திராட்சையை சாப்பிட்டு பயன்பெறலாம்.
குறிப்பாக உலர் திராட்சையை ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு எக்கச்சக்கமான நன்மைகள் கிடைக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உலர் திராட்சையை இரவு ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் உடல் இளைப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இந்த உலர் திராட்சை தண்ணீர் உதவுகிறது.




