எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கின்றது..!! இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தானின் அமைச்சர்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பரபரப்பாகவே தான் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிற காரணத்தினால் பாகிஸ்தானுக்கு இந்தியா மூலமாக செல்லும் சிந்து நீரை முழுமையாக நிறுத்த இந்தியா முடிவெடுத்தது. என்னதான் இதை அமல்படுத்த பல வருட காலங்கள் ஆகும் என்றாலும் அந்த சமயத்தில் பாகிஸ்தான் வறுமையில் வாடுவது உறுதியாகி விடும்.

இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால் இந்தியா போருக்கு தயாராக வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அபாசி எச்சரிக்கை விடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தானிடம் 130 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அவை அனைத்தும் இந்தியாவை தகர்த்தெறிய மட்டுமே உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் அந்த 130 அணு ஆயுதங்கள் எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது எனவும் அவர் மிரட்டி உள்ளார். இதனை பல பேர் கண்டித்து வருகின்றனர். இந்தியாவிற்கும் தீவிரவாதிகளுக்கும் நடுவே இருக்கும் போரில் பாகிஸ்தான் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அடி வாங்கிக் கொண்டே தான் இருக்கிறது.

பாகிஸ்தானின் அதிகாரிகள் கொடுக்கும் பேட்டியில் இந்தியாவின் மீது அவர்கள் எவ்வளவு வண்ணத்தில் இருக்கின்றனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. என்னதான் இந்தியா சாதாரண பாகிஸ்தான் மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நினைத்தாலும் இவர்களின் பேச்சினாலும் செயல்களினாலும் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க நிர்பந்தத்துக்குள் இந்தியா சென்று விடுகிறது.

Read Previous

இந்த சூப்பை குடித்தாள் நமக்கு எந்த நோய்களும் அண்டாது..!! அசத்தலான சிக்கன் வெஜிடபிள் சூப் இதோ..!!

Read Next

சிறுநீரக கற்களை அகற்றும் சட்னி..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular