“SBI REWARD27..APK” என்ற பெயரில் உள்ள ஒரு File-ஐ பதிவிறக்கம் செய்யுமாறு மோசடி கும்பல் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது. எஸ்பிஐ வழங்கும் பரிசுகளை பெறுவதற்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எஸ்பிஐ வங்கி மறுத்துள்ளது. இதுபோன்ற கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், எஸ்பிஐ ஒருபோதும் குறுஞ்செய்தி அல்லது whatsapp மூலம் இணைப்புகள் அல்லது API கோப்புகளை அனுப்புவதில்லை என விளக்கம் அளித்துள்ளது.




