இன்றைய காலகட்டத்தில் சிறியோர் முதல் பெரியவர் வரை சாப்பிடும் பொழுது காய்கறிகளை ஒதுக்கி வைக்கின்றனர் ஆனால் காய்கறியில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் வேறு எதிலும் கிடைக்கவில்லை..
காய்கறிகளை ஒதுக்காமல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைத்து வருகின்றன, முருங்கைக்காய் ஆண்களின் விந்துவை விருத்தி செய்யவும், பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் பெரிதும் பயன்படுகிறது, சுரக்காய் உடல் சோர்வை நீக்கி வயிற்றில் கொழுப்பை கரைக்கிறது, உருளைக்கிழங்கு மலச்சிக்கலை சரி செய்கிறது, வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் கல் அகற்றி உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது, வாழைப்பூ மலச்சிக்கலை போக்கும், வாழைக்காய் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும், குடைமிளகாய் அஜீரணத்தை போக்கும், சவ்சவ் எலும்பும் பற்களை உறுதிப்படுத்த பெரிதும் உதவுகிறது, வெண்டைக்காய் மூளை வளர்ச்சி அதிகப்படுத்தி ஞாபகசக்தியை வளர்கிறது, கோவைக்காய் வாய் நாக்கு புண்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் குடல் புண்களையும் குணப்படுத்துகிறது, சேப்பக்கிழங்கு எலும்பு பற்களை உறுதி செய்யும் பெரிதும் உதவுகிறது..!!




