எம்புரான் செய்த புதிய சாதனை..!! மகிழ்ச்சியில் மலையாள திரை உலகினர்..!!

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் சுகுமார் இயக்கத்தில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த படம் தான் எம்புரான். இந்த படம் வெளியானதிலிருந்தே பல சிக்கல்கள் வந்த வண்ணம் தான் இருந்தன. ஒரு சில ரசிகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை தந்து வந்தனர். ஆனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது இந்த படம்.

வெளியாகி பத்து நாட்களிலேயே 250 கோடி ரூபாய் குவித்துள்ளது இந்த எம்புரான். ஒரு மலையாள படமாக அதிக வசூலை எட்டிய படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய திரை உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ், ரூபாய் 242 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் வெளியானதிலிருந்தே இந்த படத்தை தடை செய்ய வேண்டும், சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பலர் போராடி வந்தனர். இருந்தாலும் இத்தனை தடைகளைத் தாண்டி சாதனையை படித்துள்ளதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read Previous

குட் பேட் அக்லியன் சிறப்புக் காட்சிகள் ரத்து..!! சோகத்தில் ரசிகர்கள்..!!

Read Next

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது?.. நோய் பற்றி அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular