அமேசான் நிறுவனம் தனது மனிதவள (HR) பிரிவில் இருந்து 15% ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வேறு சில துறைகளில் இருந்தும் ஊழியர்களை நீக்குவது குறித்து நிறுவனம் ஆலோசித்து வருகிறது. நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்களில் ரூ.8,300 கோடி வரை முதலீடு செய்துள்ள நிலையில், இந்த வேலைநீக்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில், AI ஆதிக்கம் காரணமாக ஐபிஎம் (IBM) நிறுவனத்தில் இருந்தும் 8,000 ஊழியர்கள் நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




