தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்., 16) தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், ராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி, தென்காசியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இனி தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.




