வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுப் பொருட்கள் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுப் பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
வெறும் வயிற்றில் தக்காளி சாப்பிடக்கூடாது ஏனெனில் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள அமிலமானது இரப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து கரையமுடியாத ஜெல்லை உருவாக்கிவிடும் அதனால் வயிற்றில் கற்களை கூட உருவாக்கும்.
ஒருபோதும் மாத்திரைகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது ஏனெனில் வயிற்றில் உள்ள படலத்தை அழிப்பதோடு வயிற்று அமிலத்துடன் கலந்து உடலில் பல கோளாறுகளை ஏற்படுத்திவிடும் எனவே மாத்திரை சாப்பிடுவதற்கு முன்பு ஏதாவது சாப்பிட்டுவிட்டு மாத்திரையை சாப்பிடுங்கள்.
காபி மற்றும் டீ மிகவும் ஆபத்தான ஒரு பானம் இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதிலுள்ள காபின் நஞ்சு தீவிரமான பிரச்சனைக்கு ஆளாக்கிவிடும் எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
தயிரில் உள்ள பாக்டீரியா நல்ல பாக்டீரியாவாக இருந்தாலும் வயிற்றுப் படலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும் எனவே ஒருபோதும் தயிரை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.




