மிளகு சொல்லும் மருத்துவம்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

மிளகு சொல்லும் மருத்துவம்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

மிளகு சொல்லும் மருத்துவம் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்.

ஒரு மிளகு சேர்த்தால் போதும் உண்ணும் உணவு சுவையாகி போகும். அதே இரண்டு மிளகோடு இரண்டொரு ஆடாதோடை இலையும் சேர்த்தால் இருமல் சளி இருக்கும் இடம் தெரியாமல் போகும். மூன்று மிளகோடு வெங்காயம் சேர்த்தால் முசுமுசுவென்று முடி முளைக்கும். நான்கு மிளகோடு சுக்கு சேர்த்தால் நெஞ்சு வலி கொஞ்சமும் இல்லாமல் போகும். ஐந்து மிளகு கூட திப்பிலையும் சுக்கும் ஐக்கியமானால் கோளை அகன்று போகும். ஆறு மிளகோடு பெருஞ்சீரகம் சேர்ந்தால் ஆறிடும் நாட்பட்ட மூல நோய்கள். ஏழு மிளகு  தூள் செய்து உண்டால் ஏற்பட்ட தொண்டை கம்மலும வேகமாக குறைந்து குணம் ஆவதோடு ஏற்படாமல் இருக்கும் நல்ல பசியும் ஏற்படும். எட்டு மிளகு பெருங்காயம் சேர்ந்தால் எடுக்கும் வாந்தி உடனே நிற்கும். ஒன்பது மிளகோடு துளசி சேர்ந்தால் ஒவ்வாமை அகன்று ஓடிவிடும். பத்து மிளகு சேர்ந்த உணவை பகைவன் வீட்டிலும் பயமின்றி உண்ணலாம்.

Read Previous

ஒருபோதும் வெறும் வயிற்றில் இதையெல்லாம் சாப்பிட்டு விடாதீர்கள்..!! ஆபத்து உங்களுக்கு தான் மக்களே..!!

Read Next

பெண்களின் வயிற்று சதை குறைய இதை மட்டும் பண்ணினால் போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க பெண்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular