ஒரு கணவன் தன் பொறுப்பற்ற மனைவிக்கு எழுதிய அழகான கடிதம்..!! படித்ததில் வலித்த பதிவு..!!

அன்புள்ள மனைவியே நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் அதற்கு சாட்சியாக நமக்கு இரண்டு அழகான குழந்தைகள் அரசால ஆண் ஒன்றும் வீட்டிற்கு மகாலட்சுமி ஒன்றும் என நம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்…

நான் காலையில் சென்றால் மாலையில் திரும்புகிறேன் வெளியில் சென்றாலும் நீ மற்றும் நம் குழந்தைகளுடைய நினைவுகளுடன் தான் நான் வாழ்கிறேன்… நீ வீட்டில் தனியாக இருக்கிறாய் என்பதற்காக உனக்கு என் தகுதிக்கு மீறி அழகிய விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு போன் வாங்கிக் கொடுத்துள்ளேன்….

அதேபோல நீ தேவைப்படுவதையும் உடனடியாகவும் வாங்கிக் கொடுக்கிறேன்… உன்னை ராணியாக பார்த்துக் கொள்கிறேன் … ஆனால் உன் மனம் ஏனோ என்னை தேடி வருவதில்லை … எப்பொழுதும் உன் நினைவுகளில் சிந்தனைகளில் வேறு ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது என்னவென்று என்னால் அறிய முடியவில்லை….

நீ எனக்காக செய்யும் வேலைகள் அனைத்தும் கடமைக்காக செய்வது போல் உள்ளது பல நேரங்களில் நானும் கவனித்துள்ளேன்… நீ போனும் கையுமாகவே இருக்கின்றாய் இது நல்லதல்ல என்பது என் கருத்து ஆனாலும் அதை சொன்னால் நம் இருவருக்குள்ளும் சண்டைதான் மிஞ்சும்…

இன்று பல வீடுகளில் கணவன்கள் வெளியில் சென்றவுடன் ஆண்ட்ராய்டு போன்களில் முகநூல் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் telegram என பல வலைதளங்கள் உள்ளது… அவைகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள் தவறில்லை பெண்கள் எப்பொழுதும் அடிமையாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணமல்ல…

ஆனால் நீங்கள் பயன்படுத்தும் வலைதளங்களில் உங்கள் நட்பு வட்டாரங்களில் உள்ள அனைவரும் நல்லவர்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு… 40 வயதிற்கு மேல் ஆனால் ஆண்களின் முழு கவனமும் தொழிலின் மேலும் அடுத்த வளர்ச்சியின் மேலும் சென்று விடுகிறது …

வீட்டிற்கு வந்தால் சலிப்புடன் குளித்து உணவருந்தி விட்டு உறங்கச் சென்று விடுகிறோம்… ஆனால் நீங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உங்கள் மொபைலில் மூழ்கி இருக்கின்றீர்கள் … நீங்கள் பயன்படுத்தும் ஆப்புகளில் உள்ள அனைவரும் நல்லவர்கள் அல்ல..

அவர்கள் தங்கள் தேவைகளுக்காகவும் பொழுதுபோக்குகாக மட்டுமே இங்கு வருகின்றார்கள்… வலைத்தளங்களில் 40 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களை வலை வீசி பிடிப்பதே இங்கு பலரது வேலை… நமது பெண்கள் எவ்வளவு பட்டாலும் திருந்துவதில்லை முகம் தெரிய முகநூலில் எந்நேரமும் சேட் வீடியோ கால் என வாழ்கின்றீர்கள்…

உங்களது கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ள உங்கள் பிள்ளைகள் உறவுகள் அம்மா அப்பா கணவன் என இத்தனை பேர் இருந்தாலும் யார் என்றே தெரியாத சில கயவர்களிடம் உங்களை நீங்கள் இழக்கின்றீர்கள்… இதனால் நீங்கள் மட்டும் அசிங்கப்படவில்லை நமது குடும்பமும் கலாச்சாரமும் கெட்டுப் போகின்றது…

ஒரு நாள் ஒருவரிடம் மனவிட்டுப் பேசுவதாலோ வீடியோ கால் பண்ணுவதாலோ நேரில் சந்திப்பதாலோ சில மணித்துணிகள் அவர்களுடன் தனிமையில் இருப்பதாலோ நமக்கு கிடைக்கப் போவது எதுவும் இல்லை… நீங்கள் நல்லவர் என்றும் நம்பும் அந்தக் கயவர்கள் உங்களது பதிவுகளை பத்திரப்படுத்தி வீடியோ கால்களை ரெக்கார்ட் பண்ணி உங்களை பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்….

கணவர்கள் ஆகிய எங்களுக்கு எப்பொழுதும் எங்களைப் பற்றி எந்த சுயநலமான எண்ணமும் இல்லை … எங்கள் எண்ணங்களில் நீங்களும் நமது குழந்தைகளை மட்டுமே உள்ளனர் ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் கணவர் அன்பாக இல்லை அரவணைக்கவில்லை என்பதால் தவறான வழிகளில் செல்கின்றீர்கள் …

இது மிகவும் தவறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் கணவர் வெளியில் சென்றவுடன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சின்ன சின்ன கைவேலைகளை செய்யுங்கள் துணி தைங்கள் பொடி தயாரிங்கள் சோப்பு தயாரிங்கள் வீட்டில் இருந்து கொண்டே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்….

பெண்களால் முடியாதது எதுவுமில்லை… சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் சாதனை பெண்ணாக மாறலாம்… ஆனால் முகநூலில் முகம் தெரிய ஆன இடம் அன்பை தேடி உங்களது வாழ்க்கை வீணடித்துக் கொள்ளாதீர்கள் …. இதனால் பாதிக்கப்படுவது எங்களது மனமும் கவுரவமும் குடும்பமும் தான் இதை கவனத்தில் கொள்ளுங்கள் …

இன்று 90 சதவீதம் வீட்டில் ஆணோ பெண்ணோ அமர்ந்து பேசிக்கொள்ள நேரமில்லை … அதனால் நாங்கள் உங்கள் மீது அன்பாக இல்லை என்று அர்த்தம் இல்லை எங்கள் உயிர் எப்பொழுதும் உங்களுடன் தான் இருக்கும் தயவு செய்து முகம் தெரிய மனிதர்களுடன் பழகும் பொழுது உங்களது சுய விவரங்களை கொடுக்காதீர்கள் …

தனிமையில் சந்திக்காதீர்கள் இந்தக் காலத்தில் வயது வித்தியாசமே இல்லாமல் ஆண் பெண் பழகிக் கொண்டுள்ளார்கள் …. நாகரீகம் என்ற போர்வையில் குடும்ப பந்த பாசத்திற்கு ஒதுக்கும் நேரத்தை விட முகநூலில் முகம் தெரிய ஆணுக்கு ஒதுக்கும் நேரம் அதிகம்…

இனி மேலும் இது போல தவறு செய்யாதீர்கள் எல்லா பெண்களையும் நான் கூறவில்லை… தவறான வழியில் செல்லும் பெண்களுக்கான பதிவு இது உங்களது அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் மிகவும் நம்பும் நபர் சேமித்துக் கொண்டிருப்பார் ….

அது ஒரு நாள் விஸ்வரூபமாக வெளியில் வரும் பொழுது நமக்கு அவமானம் மட்டும்தான் மிஞ்சும் … அப்பொழுது நாம் செய்ய வேண்டியது இறந்து போவது மட்டும் தானே தவிர வேறு எதுவும் இல்லை …. தயவு செய்து தவறான எண்ணங்களிலோ வழிகளிலோ செல்லாமல் நல்ல வழிகளில் மிகவும் சந்தோசமாக கணவர்களுடன் வாழுங்கள்…

ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள் இன்று பல குடும்பங்களில் கட்டிய கணவனை விட்டுச் செல்லும்போது எவனே தெரியாத ஒருவன் உங்களை கால முழுவதும் பார்த்துக் கொள்வான் என்று நீங்கள் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம் …. இன்னைக்கு நீங்க நாளைக்கு வேற ஒருத்தங்க நாளானைக்கு ஒரு தங்க இதுதான் பல ஆண்களுடைய,மற்றும் பெண்களுடைய சாதனைகள்…. இது தொடர்ந்து கொண்டே இருக்குமே தவிர நிற்காதது…

ஆண்களையே மிஞ்சும் வகையில் பெண்களும் முகநூலில் ஆண்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்…. அதனால் தயவுசெய்து முகநூலை பயன்படுத்தும் பொழுது மிகவும் பாதுகாப்பாகவும் கண்ணியமான முறையிலையும் பயன்படுத்துங்கள்… இந்த வாழ்க்கை ஒருமுறைதான் வாழப் போகிறோம் அதை மிகவும் சந்தோசமாக நமது குடும்பத்துடனும் நம் குழந்தைகளுடனும் வாழ வேண்டும்…

நாகரீகம் என்ற போர்வையில் நாம் எந்தத் தவறும் செய்து விடக்கூடாது நமக்காக காத்திருப்பது நம் உறவுகள் மட்டுமே முகநூல் உறவுகள் கானல் நீரை போன்றது… நீங்கள் எவ்வளவுதான் அவர்களிடம் பிரியமாக பழகினாலும் அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியாது அறிமுகப்படுத்த முடியாது…

இவர்கள் யார் எப்படி தெரியும் என்ன தெரியும் இவர்களைப் பற்றி என்ற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல திணற வேண்டி இருக்கும். நான் என்ன சொல்ல வர்றேன்னா கட்டின புருஷன் கிட்ட பொண்டாட்டி கிட்ட கிடைக்காத அன்பு எவனே தெரியாத ஒருத்தன் ஒருத்தி கிட்ட கிடைக்கும்னு தேடுறீங்களே இதெல்லாம் வந்து எங்க போய் முடியும் தெரியுமா..

பண்பாடு என்றால் என்ன கணவனுக்காக மட்டுமே மனைவி வாழ்வது மனைவிக்காக மட்டுமே கணவன் வாழ்வது இவர்கள் இருவருமே சரியில்லை என்றால் அவர்கள் வளர்க்கும் குழந்தைகளின் வளர்ப்பு எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.

நகை நட்டு பணமோ புகழோ நம் வாழ்க்கையை சந்தோசமாக வைத்திருக்காது … கட்டின கணவன் மட்டுமே மனைவி மட்டுமே நினைத்தால் தான் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் இந்த முகநூலில் ஆடம்பரத்திற்காகவும் அன்புக்காகவும் ஆட்களை தேடாதீர்கள்…

அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உங்களை விட பெஸ்டாக வேறொருவர் கிடைத்தால் கண்டிப்பாக சென்று விடுவார்கள்… நீங்கள் எத்தனை கண்ணீர் விட்டு கதறினாலும் திரும்ப வரமாட்டார்கள் அதனால் நீங்கள் உங்கள் குடும்பம் குழந்தைகள் உறவுகள் சொந்தங்கள் பந்தங்கள் என அன்பினில் வாழுங்கள்…

இன்று கிடைக்காவிட்டால் நாளை கிடைக்கும் நம் உறவுகளை நம்புங்கள்… ஆனால் முகநூல் அன்பு பழகும் வரை மட்டுமே பழகிய பின்பு அவர்களது தேவைகள் நிறைவேறும் வரை மட்டுமே.. அதனால் இவைகளை தூக்கிப் போட்டுவிட்டு உங்கள் குழந்தைகளுக்காகவும் கணவருக்காகவும் காத்திருந்து பணிவிடை செய்யுங்கள்…

அதேபோல மனைவிகளும் உங்கள் கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் முகநூலில் வாழும் ஜீவன்களுக்காக நமது ஆசாபாசங்களை கொட்டாதீர்கள்… நமது வீக்னஸ் தெரிந்து கொண்டால் நம்மை பயன்படுத்தாமல் விட மாட்டார்கள் …

அதற்கு அன்பு என்று ஒரு பெயர் வைத்து அடிமையாக்கி அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு உங்களை யார் என்றே தெரியாது என தூக்கி எறிந்து விட்டு சென்று விடுவார்கள்… ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பெண்களோ ஆண்களோ இருவருக்கும் நான் சொல்லுவது உங்கள் குடும்பத்தாருடன் மட்டும் உங்களது நேரங்களை செலவிடுங்கள்..

Read Previous

தர்பையில் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

கண் திருஷ்டி..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular