ஒரு குழந்தை எழுதிய அழகான சிறுகதை
அம்மா அம்மா எப்பொழுதும் நிலவைக் காட்டி எனக்கு சாப்பாடு ஊட்டுகிறாய்
ஒரு நாள் அந்த நிலவை கையில் பிடித்துக் கொண்டு வா
அதோடு பந்து விளையாட வேண்டும் என்ற ஆசையாக கேட்கிறது
அந்த அம்மாவுக்கும் மிகப்பெரிய சக்தி இருக்கிறது
வானத்தில் பறந்து அந்த நிலவை பிடித்து கொண்டு வந்து
அந்த குழந்தையின் கையில் கொடுத்து விடுகிறார்கள்
அது உருட்டி விளையாடுகிறது
சட்டென்று அதற்கு ஒரு சோகம் ஏற்படுகிறது
அம்மா அம்மா நீ கடைக்கு போனாலும் எனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கிறது
ஆனால் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதனுடைய நிலவை பிரிந்து
அழுவதுபோல இருக்கிறது
அதனால் திருப்பிக் கொண்டு போய் அந்த நிலாவை வானத்திலே வைத்து விட்டு வந்துவிடு
எனக்கு விளையாட சாதாரண பந்து போதும் என்று சொல்லுகிறது
அந்த குழந்தையின் அன்பை பாசத்தை புரிந்து கொண்ட அந்த அம்மா மறுபடியும் கொண்டு போய் நிலவை வானத்தில் விட்டு விடுகிறார்
இந்த கதையினுடைய செய்தி என்னவென்றால்
நமக்கு லவ் அண்ட் லைக் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை
ஐ லவ் பிஷ்ஷஸ் என்றால் மீன்களை சாப்பிடுவதற்கு பிடிக்கிறது என்றே அர்த்தம்
உங்களை வளர்ப்பதற்கு பிடிப்பதில்லை
ஐ லவ் ஃபிளவர்ஸ் என்றால் அந்த பூக்களை பறித்து தலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது
அது செடியில் இருந்தால் எவ்வளவு அழகான அழகு
என்று புரிவதில்லை அந்த தோட்டத்திற்கு மலர்கள் எவ்வளவு அழகு
அதே போலத்தான் பெண்களை மனிதர்களை இயற்கையான பொருள்களை இயற்கையே
எல்லாம் அந்த இயற்கையோடு இயற்கையாக அழகாக ரசிப்பதற்கு நமக்கு விரும்புவதில்லை
ஒரு அரசன் மலை மேல் பயணம் செய்கிறார்
அந்த காட்சிகள் எல்லாம் அவனுக்கு பிடித்து விடுகிறது
அதை ரசிப்பதற்கு பதிலாக அந்த பறம்பு மலையை எதிரிகளிடமிருந்து போராடி கைப்பற்றுகிறார்
ரசிக்க முடியாமல் கிழவனாகி இறந்து போகிறார்
இப்படி வாழ்க்கை முழுவதும் இயற்கையை இயற்கையோடு ரசிக்க தெரியாமல்
அதை ஆளுமை செய்து அதை கடத்திக் கொண்டு வந்து அனுபவிக்கவும் தெரியாமல் இரசிக்கவும் தெரியாமல்
மனித மனங்கள் துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கிப் போகின்றன.



