ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..!! எப்போது தூங்க வேண்டும்..!! எப்படி தூங்க வேண்டும்..!!

நம் அனைவருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்ற கேள்வி பெரிதாக இருக்கும். ஒரு சிலர் ஆறு மணி நேரம் தூக்கம் போதுமென்று கூறுவார்கள். ஒரு சிலர் 9 மணி நேரம் தூக்கம் வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் எவ்வளவு நேரம் தூக்கம் தான் நமக்கு தேவை. மருத்துவர்கள் கூறுவது என்ன. இவை அனைத்தையும் பற்றி இந்த பதிவில் காண்போம்.

ஒரு நாளைக்கு நாம் எட்டு மணி நேரம் அளவில் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அது எந்த 8 மணி நேரம் என்பதையும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிலர் இங்கு இரவு நேரங்களில் கம்மியாக தூங்கி விட்டு மதியம் நேரத்தில் உறங்கி தான் 8 மணி நேரம் உறங்கியதாக கூறி வருகின்றனர். அப்படி எப்போதும் செய்யக்கூடாது. அது சரி எந்த நேரத்தில் தூங்குவது என்று உங்களுக்கு தெரியுமா.

சரியாக சாய்ந்திரம் ஆறு மணி அளவிற்கு முன்பு அல்லது ஏழு மணி அளவிற்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டுவிட்டு ஒரு 2 மணி நேரம் இடைவேளைக்குப் பிறகு 8:30 முதல் 9:30 மணிக்குள் நாம் தூங்கி இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் காலையில் 5 மணிக்கு மேல் நாம் தூங்க கூடாது. சோர்வாக இருந்தால் மதிய நேரங்களில் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தூங்குவதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் இங்கு சில பேருக்கு தூங்குவதற்கு நேரம் கிடைக்காது. அதாவது இரவு வேலைகளை முடித்துவிட்டு தூங்க 11 மணி அளவில் ஆகிவிடும். அதே வேளையில் காலையிலும் சீக்கிரம் எந்திரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். இது முக்கால்வாசி நமது வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு தான் இருக்கும். அப்படி இருக்க ஒரு ஆறு மணி நேரம் அல்லது 5 மணி நேரம் தூக்கமே போதும். ஆனால் அந்தத் தூக்கம் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்று நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். தூங்குவதற்கு முன்பு நன்கு தியானம் செய்துவிட்டு உறங்கினால் நமது தூக்கம் ஆழ்ந்த உறக்கமாக அமையும்.

அதாவது உங்களுக்கு கனவு வராமல் இருந்தால் அதுதான் ஆழ்ந்த உறக்கம். அப்படி தூங்கினீர்கள் என்றால் மூன்று மணி நேரம் தூக்கம் கூட ஒரு நாளைக்கு போதும். ஆனால் அப்படி தூங்க வேண்டும் என்றால் நம் மனது அமைதியாக இருக்க வேண்டும். தூங்குவதற்கு முன்பு எந்த சிந்தனைகளும் இருக்கக் கூடாது. நன்கு தியானம் செய்துவிட்டு மன அமைதியை பெற்று விட்டு தூங்கினால் நமது தூக்கம் ஆழ்ந்த தூக்கமாக அமையும்.

Read Previous

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ. 2,05,700/- வரை மாத ஊதியம்..!!

Read Next

எந்த ஹோமம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular