ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சேரப் போகும் நமக்கு மிகவும் பிடித்த விளையாட்டு..!! என்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

அனைத்து மக்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்டு விளையாட வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்க்கப்படும் ஒரு தொடர் தான் ஒலிம்பிக்ஸ். இதில் பங்கேற்க பல நாடுகள் தங்களது சிறந்த வீரர்களை அனுப்பி வைக்கும். இதில் பதக்கம் என்றால் அது பெரிதாக பாராட்டப்படும். ஆனால் இத்தனை காலமாக ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் இருந்தது இல்லை. அதேபோல ஏசியன் கேம்ஸில் கிரிக்கெட் இதுவரை இருந்ததில்லை.

ஆனால் கடந்த ஏசியன் கேம்ஸ் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு அதில் இந்திய அணி ருத்ராஜ் தலைமையில் பதக்கம் வென்றது நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அடுத்ததாக 2028 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. T20 ஃபார்மெட்டில் நடக்கவிருக்கும் இந்த போட்டிகள் ஆறு அணிகளுக்கு இடையே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்தெந்த அணிகள் விளையாட உள்ளன எப்போது போட்டி நடக்கும் எங்கு நடக்கும் என்ற தகவல்கள் அடுத்து வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Read Previous

குட் பேட் அக்லி திரைப்பட விமர்சனம்..!! அஜித்துக்கு வெற்றி படமா இல்லை அடுத்த தோல்வி படமா..!!

Read Next

தண்ணி மேல மிதக்கக் கூடாது..!! விந்தணு பரிசோதனை வீட்டிலேயே இப்படி செய்யுங்க..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular