தண்ணி மேல மிதக்கக் கூடாது..!! விந்தணு பரிசோதனை வீட்டிலேயே இப்படி செய்யுங்க..!! தெரிஞ்சுக்கோங்க..!!

தண்ணி மேல மிதக்கக் கூடாது…

விந்தணு பரிசோதனை வீட்டிலேயே இப்படி செய்யுங்க..

 

ஆண்களின் விந்தணுக்கள் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு வீட்டிலேயே ஒரு எளிமையான பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைத்துள்ளார்.

 

தற்போது சமூகத்தில் நிலவி வரும் குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண்களின் விந்தணுக்கள் தரமானதாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக அமைகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், மன அழுத்தம் என பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.

 

எந்த அளவிற்கு ஒரு ஆணின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். இதற்காக விந்தணுக்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, திருமணத்திற்கு முன்பாகவே விந்தணுக்களை பரிசோதனை செய்து கொண்டால், அதில் ஏதேனும் பிரச்சனை இருக்கும்பட்சத்தில், அந்தப் பிரச்சனையை சரி செய்து கொள்ள வசதியாக இருக்கும்.

 

அந்த வகையில் விந்தணுக்கள் பரிசோதனை தொடர்பாக ஆய்வுக் கூடங்களுக்கு செல்வதற்கு முன்பாக வீட்டிலேயே எளிமையான முறையை பின்பற்றலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். இதன் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, விந்தணுவை ஒரு கிளாஸ் நீரில் போடும் போது, அவை நேராக தண்ணீரின் அடிப்பகுதிக்கு சென்றால் அவை ஆரோக்கியமாக இருக்கிறது என்ற அர்த்தம் என மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த விந்தணு விரைவாக கரைந்து தண்ணீரின் மேற்பகுதியில் மிதந்தால், அது ஆரோக்கியமாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சேரப் போகும் நமக்கு மிகவும் பிடித்த விளையாட்டு..!! என்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

Read Next

வெங்காயம் பயன்கள்..!! தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular