ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்..!! அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!
நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த வரிசையில் நின்று கொண்டிருக்கிறோம். எந்த வரிசையில் என்று தானே கேட்கிறீர்கள் ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் அந்த வரிசையில் தான் நாமும் நின்று கொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நமக்கு தெரியாது நாம் வரிசையில் எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை நாம் வரிசையில் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையில் இருந்து வெளியேறவும் முடியாது நாம் வரிசையை தவிர்க்கவும் முடியாது எனவே நாம் வரிசையில் காத்திருக்கும் போது நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள் தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள் பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள் நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள் உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள் சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள். சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். அனைவரிடமும் அன்பாக இருங்கள். சண்டை போட்டால் சமாதானமாக போங்க.



