கடன் தீர பாசிப்பருப்பு பரிகாரம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

கடன் தீர பாசிப்பருப்பு பரிகாரம்:

கடனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்பல. தேவைக்காக கடனை வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் தீராத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுடைய கடன் பிரச்சினையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைவதற்கு சில தாந்திரீக பரிகாரங்கள் இருக்கின்றன.

அந்த பரிகாரங்களில் ஒன்றுதான் இந்த பாசிப்பருப்பு பரிகாரம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பாசிப்பருப்பை எப்படி தானம் செய்தால் நம் வாழ்வில் இருக்கும் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது. நமக்கு ஏற்படக்கூடிய பண வரவும் சரி பணக்கஷ்டமும் சரி நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் திகழ்கிறது. பணக்கஷ்டம் ஏற்படும் பொழுது நம்மை அறியாமலேயே பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறோம்.

கடன் என்னும் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு நம்முடைய கர்ம வினைகளை நாம் குறைக்க வேண்டும். இப்படி கர்ம வினைகளை குறைக்க வேண்டும் என்றால் நம்மால் இயன்ற தான தர்மங்களை நாம் செய்ய வேண்டும். அந்த வகையில் பாசிப்பருப்பை எந்த முறையில் எப்படி தானம் செய்தால் நம்முடைய கர்ம வினை குறைந்து கடன் பிரச்சினை தீரும் என்று பார்ப்போம்.

அனைவரின் இல்லங்களிலும் சமையலுக்காக பாசிப்பருப்பு வாங்கி வைத்திருப்போம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு சமையலுக்கு உபயோகப்படுத்தும் பாசிப்பருப்பை தனியாக ஒரு கிலோ என்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெல்லமாக இருக்கும் பட்சத்தில் அதை பொடித்து வைத்துக் கொள்வது நல்லது.

தினமும் யாருக்கு கடன் பிரச்சினை இருக்கிறதோ அவர்கள் படுக்கச் செல்வதற்கு முன் ஒரு சிறிய கிண்ணத்தில் அவர்களுடைய கையால் ஒரு கைப்பிடி அளவு பாசிப்பருப்பையும் ஒரு கைப்பிடி அளவு வெல்லத்தையும் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இந்த ஊற வைத்திருக்கும் பாசிப்பருப்பை எடுத்துக்கொண்டு போய் அருகில் இருக்கும் பசுமாட்டிற்கு தானமாக தர வேண்டும்.

தினமும் இந்த முறையில் நாம் பாசிப்பருப்பை தானமாக தருவதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் குறைவதோடு மட்டுமல்லாமல் கடன் பிரச்சனையும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இந்த பரிகாரத்தை என்று வேண்டுமானாலும் நாம் ஆரம்பிக்கலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பசு மாட்டிற்கு தானமாக தரலாம். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தரலாம். இப்படி தானம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.

கர்ம வினைகள் குறைவதன் காரணமாக கடன் சுமையும் குறைய ஆரம்பிக்கும்.
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்கள் வாழ்க்கையில் கர்ம வினைகள் குறைவதோடு கடன் சுமையும் தீரும்.

Read Previous

நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்க்கும் நபரா நீங்கள்..?? இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

Read Next

ஆன்மீக கதை..!! உருவத்தை வைத்து எடை போடாதே என்பதை உணர்த்திய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular