இரண்டு வருடங்களாக பராமரிப்பு இன்றி பழுதடைந்து கிடந்த மின் விளக்குகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ள நிலையில் மின்விளக்குகளின் ஒளியில் பாம்பன் சாலை பாலம் முழுவதும் ஜொலித்து வருவதை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்..
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துடன் ராமேஸ்வரம் தீவை இணைத்து 1988 ஆம் ஆண்டு சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் மீனவர்கள், சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது, அன்றிலிருந்து இன்று வரை தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் பாலத்தினை கடந்து வருகின்றது, மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தில் இருபுறமும் 200-க்கும் அதிகமான மின்விளக்குகள் உள்ளன, இவை அனைத்தும் பழுதடைந்த நிலையில் சாலை பாலம் இருளில் மூழ்கியது, இதனால் இரவில் விபத்து அடிக்கடி ஏற்பட்ட நிலையில் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் பாலத்தினை கடந்து சென்றனர், இந்த நிலையில் கடந்த மாதம் அனைத்து மின்விளக்குகளையும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு பழுதான மின் விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர், தற்போது அனைத்து மின்விளக்குகளும் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டு வருடங்களாக இருளில் மூழ்கிக் கிடந்த பாம்பன் சாலை பாலம் மின்விளக்குகள் ஒளியில் ஜொலித்து வருகிறது ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மின்விளக்கின் அலகில் ஜொலிக்கும் பாம்பன் பாலத்தின் அழகை ரசித்து புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்..!!




