கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
மிளகு தானே காரம் ஏன் கடுகு என்று சொல்லி இருக்கிறார்கள்?
கடுகு தாளித்தால் உணவில் வாசம் சுவை அதிகரிக்கும். அந்த அளவுக்கு கடுகு வலிமை வாய்ந்த சுவை கூட்டி.! இந்த இடத்தில் காரம் என்பது நல்ல சுவையைக் குறிக்கும். காரசாரம் என்பது இதுதான்!
இதுபோல, நற்காரியங்களைச் செய்யும் போது பெரியோரைத் துணைகொள்ளல், அந்த செயலை மிளிரச் செய்யும்.
பெரியோர்கள் செயலாற்றும் வல்லமை அவ்வளவாக இல்லாதவராயினும்,
அவர்கள் நல்ல பல ஆலோசனைகள் கூறுவதால்… ஒரு செயலை மெருகூட்டும் வல்லமை மிக்கவர்கள் என்பதைத்தான் இப்பழமொழி குறிப்பிடும்.



