சாக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (29). இவர் பர்னிச்சர் கடையில் வேலை செய்தபோது தன்னுடன் வேலை செய்து வந்த சுபலட்சுமி (25) காதலித்து வந்தார். கடந்த 1 மாதத்திற்கு முன்புதான் கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் வெள்ளகோவில் சுபலட்சுமியின் சகோதரி மேனகாவின் வீட்டில் வசித்து வந்தனர். மேனகா அவருடைய கணவர் இருவரும் ஒரு கோவில் விசேஷத்திற்காக திருச்சி சென்று விட்டனர். வீட்டில் இருந்த மணிகண்டன் கடையில் சிக்கன் வாங்கி வந்து தனது மனைவியை சாப்பிட சொல்லி உள்ளார்.
தனது சகோதரி கோவிலுக்கு சென்று இருப்பதால் வீட்டில் சிக்கன் சாப்பிட மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டின் விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்டார். இதையறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரின் உடலை பார்த்து காதல் மனைவி சுபலட்சுமி கதறி அழுததை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




