Oplus_131072
அக்கறை இல்லாத கணவன். அன்பு செய்யும் மனைவி….
என்னுடைய உறவினர் நல்ல வேலையில் இருக்கிறார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அவரது அலுவலக நண்பர்கள், “வாங்கும் மாத சம்பளத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் கொடுத்த பழக் கப்படுத்திக் கொள்ளாதே. பின்பு எதற்கெடுத் தாலும் அவரிடம் கையேந்தி நிற்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்கள்.
அதனையே பின்பற்றியவர், மாத சம்பளத் தில் மனைவியின் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் கொடுக்காமலும், மனைவியிடன் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அக்கறை இல்லாமலும் இருந்திருக்கிறார். மனைவியாக கேட்டால் மட்டுமே பணம் கொடுத்திருக் கிறார். அந்த பெண் வசதி படைத்தவர் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
ஒருநாள் உறவினர் வீட்டில் இருந்து அலுவலகம் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கணவர் விபத்>தில் சிக்கியதை அறிந்த மனைவி துடிதுடித்துப்போனார்.
சுமார் ஒரு மாதமாக மருத்துவமனையிலேயே தங்கி இருந்து கணவரை பரிவுடன் கவனித்துக்கொண்டார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்ததால் மருத்துவ செலவு அதிகமானது.
தன்னுடைய நகைகளை அடகு வைத்தும், தனது உறவுகளிடம் கடன் வாங்கியும் மருத்துவ செலவுகளை தனியொருத்தியாக சமாளித்திருக் கிறார். அவருடைய அன்பான கவனிப்பாலும், தொடர் மருத்துவ சிகிச்சையினாலும் உறவினர் உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து டிஸ் சார்ஜாகி வீடு திரும்பினார். எல்லா செலவு களையும் மனைவிதான் செய்திருக்கிறார் என்பதை அறிந்தவர் மன வேதனை அடைந் தார். அலுவலக நண்பர்களின் பேச்சை கேட்டு மனைவியின் அடிப்படை செலவுக்கு கூட பணம் கொடுக்காமல் இருந்ததை எண்ணி தன்னைத்தானே நொந்து கொண்டார்.
ஏனெனில் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் உறவினரின் சொத்து மதிப்பைவிட அவர் மனைவி செய்திருக்கும் மருத்துவ செலவுகள். அதிகம். உயிருக்குயிராய் நேசிக்கும் தன்னுடைய மனைவியிடம் பணம் கொடுக்க மனமில்லாமல் இருந்த நிலையை எண்ணி தற்போது வருந்துகிறார்.
“மனைவி என்பவள் தன்னில் பாதி. வாழ்க்கையின் உறுதுணையே மனைவி தானே. பிறர் பேச்சைக் கேட்டு தவறாக நடந்து கொண்டு விட்டோமே’ என்ற குற்ற உணர்வில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்.



