மலையாளம் கற்றுக்கொள்வது கடினமாக இருந்தது, ஆனால் பலனளித்தது என்று நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் ‘விஸ்டா வில்லேஜ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் அவர், படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்தப்படத்தில் நடித்தது உண்மையிலேயே மறக்கமுடியாத அனுபவமாக இருந்ததாகவும், கேரள ரசிகர்கள் தனக்கு எப்போதும் அளவில்லா அன்பை பொழிவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.




