மகாராஷ்டிரா: மும்பையைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவி ரஞ்சனா, தனது கணவர் வீட்டில் இல்லாத சமயம் ஷாருக் என்ற வாலிபருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை அறிந்த சந்திரசேகர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சனா ஷாருக்கை வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த சந்திரசேகரை, ஷாருக் தனது நண்பன் மைதீனுடன் இணைந்து கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை ஆரே காலனி பகுதியில் வீசியுள்ளார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ரஞ்சனா உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்.




