உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில், காதலனுடன் சுற்றிய தங்கையை, நடுரோட்டில் வைத்து சரமாரியாக அண்ணன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். அப்போது அதனைப் பார்த்த அப்பெண்ணின் அண்ணன், பெண்ணிடமும் அவரது காதலனிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சகோதரி மற்றும் காதலன் இருவரையும், அண்ணன் தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.




