பிரேசில்: கனமழை மற்றும் பலத்த காற்றால் சொரோகாபா நகரில் உள்ள டொயோட்டா கார் உற்பத்தி ஆலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போர்ட்டோ பெலிஜ் ஆலை உள்பட இரண்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆலையின் மேற்கூரை பிய்த்துக்கொண்டு சென்றதுடன், 30 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக யாரிஸ் கிராஸ் புதிய கார் மாதிரி அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




