திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில் திருவிழாவில், தலைமை காவலரை இளைஞர் ஒருவர் கத்தியுடன் விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய அந்த நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், தற்போது திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.




