தனது பெற்றோர்களான சரத்குமார்-சாயாதேவி பிரிந்ததற்கு நடிகை ராதிகாதான் காரணம் என அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்ததாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த தீராத கோபம் பிரிவினால் ஏற்பட்ட வலியால் உருவானதே தவிர, உண்மை நிலையை அறியாததால் வந்தது என்று அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். காலப்போக்கில், தனது பெற்றோர்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே பிரிந்தனர் என்பதை புரிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார்.




