குளவி கூட்டை கலைக்கலாமா..?? வீட்டில் கூடு கட்டினால் என்ன பயன்..??
குளவி கூடு கட்டிய வீட்டில் திருமணம் ஆகாதவர்கள் இருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம்பப்படும் ஒன்று. அதுமட்டுமின்றி நீண்ட நாட்களாக குளவி கூடு வீட்டில் இருந்து வந்தால் வீட்டில் உள்ள பண பிரச்சினை நீங்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் குளவி கூடு கட்டினால் குழந்தை பிறக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. குளவி கூடு செம்மண் நிறத்தில் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் வேறு நிறங்களில் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. குளவிக் கூட்டை நன்றாக பொடியாக்கி விபூதியில் சேர்த்து கலந்து நெற்றியில் பூசி வர கண் திருஷ்டி நீங்கும். குளவிக் கூட்டை கலைப்பது என்பது ஒரு மிகப்பெரிய பாவச் செயல் அதை மட்டும் யாரும் செய்து விடாதீர்கள்.



