குழந்தைகளை சாப்பிட வைப்பது மிகவும் கடினமான காரியமாக பல பெற்றோர்களுக்கு இருக்கின்றது. தினமும் ஒரே வகையான உணவுகளை கொடுத்தால் எப்படி அந்த குழந்தைகள் உற்சாகமாக சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று குழந்தைகளுக்குப் பிடித்தமான வெங்காய பொடி தோசை எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு – 2 கிண்ணம்,
இட்லி பொடி – 1 பாக்கெட்,
வெங்காயம் – 2,
கொத்தமல்லி தலைகள் – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம் கொத்தமல்லி தலைகளை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடேறியதும் தோசை மாவை ஊற்றி எப்போதும் போல தோசை கல்லில் நிரப்பவும்.
அதன் மீது வெங்காயம் கொத்தமல்லி ஆகியவற்றை தூவி இட்லி பொடியை தூவி எண்ணெய் சேர்த்து தோசையை போன்று திருப்பி எடுக்கவும். இரண்டு பக்கமும் வெந்த பிறகு அதை எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான வெங்காய பொடி தோசை தயார்.




