கேரள மாநிலம் கோட்டயத்தில், இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையை காப்பாற்றுவதற்காக தந்தையும் கிணற்றில் குதித்துள்ளார். இருவரையும், தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்து குழந்தையை கிணற்றில் இருந்து தூக்கிய தந்தை, தனது தோள் மீது அமர வைத்துக் கொண்டு, அங்கிருந்த குழாயை பிடித்தவாறு நின்றுள்ளார். உடனடியான அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், இரும்பு ஏணி மூலம் கிணற்றில் இறங்கி அவர்களை மீட்டனர்.





