ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று மாலை 3:30 மணியளவில் லக்னோவ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் கொல்கத்தாவில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோவ் அணியின் வீரர்கள் 238க்கு 3 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், மிட்செல் மார்ஷ் என்னும் வீரர் 81 ரன்களும் பூரான் 87 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற வீரர்களும் அவருக்கு கய் கொடுத்து அசத்தினர். பௌலிங்கில் கொல்கத்தா அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் ஹர்ஷித் ராணா என்னும் வீரர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய கொல்கத்தா அணி முதலில் வேகமாக தொடங்கியது. அஜிங்க்ய ரஹானே 61 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை வழங்கி இறுதி வரை போட்டியில் நீடித்தனர். இறுதியில் கொல்கத்தா 234 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.



